காதல் விவகாரத்தில் திடீர் மறியல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் திடீர் மறியல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை:காதல் விவகாரத்தில் நடவடிக்கை தாமதமானதை கண்டித்து சிவகங்கை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அருகே உள்ள பாகனேரியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகளான 22 வயது பெண்ணும், அதே ஊரைச்சேர்ந்த முத்து மகனான 25 வயது வாலிபரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பெண்ணின் தாய் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் தனது தாயுடன் கோபித்துக்கொண்டு காதலன் வீட்டிற்கு சென்று இரவில் தங்கியுள்ளார்.மறுநாள் வாலிபரின் உறவினர்கள் இத்தகவலை அறிந்து வந்து, வீட்டிற்கு வந்த பெண்ணை ஏற்க மறுத்துள்ளனர். அவர்கள் மீது பெண்ணின் உறவினர்கள் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரித்து இருவரையும் சேர்த்து வைக்காததை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் நேற்று மாலை 5:00 மணியளவில் சிவகங்கை வந்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிவகங்கை - திருப்புத்துார் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் போராட்டத்தை கைவிடச்செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.போக்குவரத்திற்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த வீரமணி, தேவகோட்டை காமராஜன், புலியடிதம்பத்தை சேர்ந்த சுரேஷ்குமார், பாகனேரி பில்லப்பன் மற்றும் வாலிபரின் வீட்டிற்கு சென்று தங்கிய இளம்பெண், அவரது தாயார் பஞ்வர்ணம் ஆகிய 6 பேரையும் இன்ஸ்பெக்டர் அழகர் கைது செய்தார்.இதற்கிடையில், இளம்பெண்ணை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் தரப்பினர் மதகுபட்டி போலீசில் கொடுத்த புகார் தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X