காவிரி பாலத்தில் திடீர் பள்ளம் கும்பகோணத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி பாலத்தில் திடீர் பள்ளம் கும்பகோணத்தில் பரபரப்பு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 காவிரி பாலத்தில் திடீர் பள்ளம் கும்பகோணத்தில் பரபரப்பு

தஞ்சாவூர்:கும்பகோணம், செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 2004ம் ஆண்டு, தாராசுரம் துவங்கி, செட்டிமண்டபம் வரை, 8 கி.மீ.,க்கு, 24.9 கோடி ரூபாய் செலவில், சிறப்பு புறவழிச் சாலையும், அரசலாறு மற்றும் காவிரி ஆறுகளின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டன.நேற்று மதியம், செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், சாலை இணையும் இடத்தில், 1 மீட்டர் சுற்றளவில், பள்ளம் ஏற்பட்டு, பாலம் உள் வாங்கியது.
இதையடுத்து, பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.சப் - கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:பாலமும், சாலையும் இணையும் இடத்தில், கிராவல் மண் கொட்டி, மணல் நிரப்பப்பட்டு சீரமைக்கப்படும். பணிகள் நிறைவு பெற்றதும், பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201808:57:27 IST Report Abuse
Srinivasan Kannaiya திராவிட அரசுகளுக்கு பராமரிப்பு என்றால் என்ன வென்று தெரியாது... எதையும் பராமரிக்காமல் விடவேண்டியது... அது விழுந்தவுடன் டெண்டர் விட்டு அரைகுறையாக கட்டி காசு பார்க்கவேண்டியது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X