'முதல்வராக ஆசையில்லை': பா.ம.க., அன்புமணி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முதல்வராக ஆசையில்லை': பா.ம.க., அன்புமணி

Added : அக் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'முதல்வராக ஆசையில்லை':  பா.ம.க., அன்புமணி

சேலம்:''முதல்வராகும் ஆசையில்லை,'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில், ஹில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், 'பா.ம.க., அன்புமணியை கேள்வி கேளுங்கள்' என்ற தலைப்பில், நேருக்கு நேர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது:
அதிக மது விற்பனை, 22 வயது இளம் விதவையர், சாலை விபத்துகள், மன நோயாளிகள், தற்கொலைகள் என, எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மது இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆசை. பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு கூட இருக்காது. இலவச பொருட்கள் தர மாட்டோம். கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை இலவசமாக பெறலாம்.
கல்வியில், அறிவு, திறன் மற்றும் தொழில் சார்ந்த புதிய முறைகளை கொண்டு வருவோம். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாற்றம் செய்வோம். நாட்டை ஆள வேண்டும்; முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்லை. அடுத்த தேர்தல் பற்றி யோசிக்காமல், அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கும் தலைவராக, அரசியல்வாதி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கோவையில், அன்புமணி அளித்த பேட்டி:முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். முதல்வர், தாமாக முன்வந்து, பதவி விலக வேண்டும்; அல்லது கவர்னர், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். வரும் தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-அக்-201811:21:38 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஹஹஹஹஹஹ் இந்தா இந்தா வந்துகுந்துய்யான்னு திமுகலியும் அதிமுகலியும் தரப்போறாங்களா பேக்கு தமிழனுக்கு இந்த ரெண்டுதான் தெரியும் தெரியலேன்னாலும் கள்ளவோட்டுலே ஜெயிக்குமுங்க இதற கட்சிகளெல்லாம் ங்கேன்னு முழிச்சுந்ந்து நிக்கணும் ஆட்சிக்கு எவன் வந்தாலும் பேய் முழி முழிக்கும் இதர கொசுறு கட்சிகள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-அக்-201806:04:01 IST Report Abuse
meenakshisundaram அப்போ எதுக்கு ராஜா ஊர் ஊரா கூட்டம்? ஒருபக்கம் இலவசமாக ஜனாதிபதிக்குண்டான வைத்தியம் இலவசமாக வழங்கப்படும்கிறார் நேற்று ஒரு paisa இலவசம் கூட கிடையாதுன்னு பேசறார் .
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
19-அக்-201816:14:41 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>கூவுறதை கூவிட்டா விடியும்போது விடியட்டும் என்ற நல்லெண்ணம்தான்...
Rate this:
Share this comment
Cancel
VadaChennai - Chennai,இந்தியா
14-அக்-201820:11:38 IST Report Abuse
VadaChennai தமிழ் நாட்டு மரங்கள் தப்பிக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X