'மாஜி' அமைச்சர் பரிதி மாரடைப்பால் மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் பரிதி மாரடைப்பால் மரணம்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'மாஜி' அமைச்சர் பரிதி மாரடைப்பால் மரணம்

சென்னை:முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, நேற்று மாரடைப்பால் இறந்தார். அவரது உடலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், அஞ்சலி செலுத்தினர்.
சென்னையை சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி, 58. இளம் வயதில், தி.மு.க.,வில் சேர்ந்தார். தி.மு.க., சார்பில், 1984, 1989, 1991, 1996, 2001, 2006 ஆகிய சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, எழும்பூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.தி.மு.க.,வில் துணைப் பொதுச்செயலராக இருந்ததுடன், 1996 - 2001ல், துணை சபாநாயகராகவும், 2006 - 2011ல், செய்தித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளரிடம், தோல்வியை தழுவினார்.
அதன்பின், தி.மு.க., தலைமையுடன், அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2013ல், ஜெ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, 2016 தேர்தலில் போட்டியிட, ஜெ., வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அவர் தோல்வி அடைந்தார்.ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் அணியில் இருந்தார். பிறகு, தினகரன் அணிக்கு தாவினார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பரிதி இளம்வழுதி, சென்னை, அடையாறில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை, மாரடைப்பால் இறந்தார்.அவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Corera - Tuticorin,இந்தியா
14-அக்-201804:14:16 IST Report Abuse
Lawrence Corera எந்த கொம்பனும் இதற்கு விதி விலக்கல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X