' ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்': தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

' ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்': தமிழிசை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:''யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.
கோவை விமான நிலையத்தில், அவர் கூறியதாவது:யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் பதவி விலக வேண்டும் எனக் கூறும் சிலர், அவர்கள் ஆட்சி செய்தபோது பதவி விலகவில்லை.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, மத்தியில் அமைச்சர்களாக இருந்த சிலரும், இதே குற்றச்சாட்டுக்கு ஆளானபோது பதவி விலகினரா; இல்லையே!
எனவே, ஊழல் குற்றச்சாட்டு எந்தவிதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும், அதை நிச்சயமாக விசாரிக்க வேண்டும்.தற்போது, முதல்வர் மீதான குற்றச்சாட்டை, அவர்கள் சட்டரீதியாக எப்படி அணுகுகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏழு பேர் விடுதலை குறித்து, கவர்னர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், தமிழிசை அளித்த பேட்டியில், ''உலகளவில் ஏற்பட்டுஉள்ள பிரச்னையால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X