ரவுடிகள் அட்டகாசம்: டாக்டர்கள் ஸ்டிரைக்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகள் அட்டகாசம்: டாக்டர்கள் ஸ்டிரைக்

Added : அக் 14, 2018
Advertisement
 ரவுடிகள் அட்டகாசம்: டாக்டர்கள் ஸ்டிரைக்

விழுப்புரம்:விழுப்புரம், அரசு மருத்துவமனையில் புகுந்து, ரவுடி கும்பல் ரகளை செய்ததைக் கண்டித்து, டாக்டர்கள், நர்ஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள, அரசு மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு, 10:40 மணிக்கு, மூன்று பேர் வந்து, கதவை திறக்க கூறினர்.செக்யூரிட்டி ராஜா, 28, 'இரவு நேரத்தில் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது' என, மறுத்தார்.ஆத்திரமடைந்த மூன்று பேரும், ராஜாவை பிடித்து தள்ளி, உள்ளே புகுந்தனர்.
மருத்துவமனை பிரசவ வார்டு கதவை அடித்து, ரகளை செய்தனர். தட்டிக் கேட்ட டாக்டர் மணிகண்டன், நர்ஸ்களிடம் தகராறு செய்து, வேகமாக வெளியேறினர்.பின், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், ஒரு கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து, செக்யூரிட்டி ராஜாவை சரமாரியாக தாக்கி, தப்பிச் சென்றது.படுகாயமடைந்த ராஜா, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று காலை, 6:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு முதன்மை மருத்துவ அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, ''மருத்துவமனைக்கு, இரவு நேரத்தில் குடி போதையில் வரும் கும்பல், அடிக்கடி ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்குவது, வாடிக்கையாகி விட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.போலீசர், அரசு மருத்துவ அதிகாரி சாந்தி மற்றும் நர்ஸ்களிடம் பேச்சு நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். காலை, 8:35 மணிக்கு, வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X