மின் வேலியில் சிக்கி தம்பதி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வேலியில் சிக்கி தம்பதி பலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி:செஞ்சி அருகே, காட்டுப்பன்றிக்கு வைத்த மின் வேலியை அகற்ற முயன்ற, தம்பதி மின்சாரம் தாக்கி இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி, 72; இவர், தனக்கு சொந்த மான, 5 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை மற்றும் நெல் சாகுபடி செய்து உள்ளார்.இந்த பயிர்களை, இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வந்தன.காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, நேற்று முன்தினம் இரவு நிலத்தை சுற்றி, தாண்டவமூர்த்தி, மின் வேலி அமைத்திருந்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு தாண்டவமூர்த்தியும் அவரது மனைவி விட்டோபாய், 65, என்பவரும், நிலத்தை சுற்றி வைத்திருந்த மின்வேலியை அகற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்தனர்.மதியம், 12:00 மணிக்கு அந்த வழியாக சென்ற, பக்கத்து நிலத்தை சேர்ந்தவர், தாண்டவமூர்த்தி தம்பதி இறந்து கிடந்ததை பார்த்து கிராம மக்களுக்கும், அனந்தபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த அனந்தபுரம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X