காங்., மேடை சரிந்து கவிழ்ந்த விஜயசாந்தி| Dinamalar

காங்., மேடை சரிந்து கவிழ்ந்த விஜயசாந்தி

Added : அக் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 காங்., மேடை சரிந்து கவிழ்ந்த விஜயசாந்தி


ஐதராபாத்:தெலுங்கானாவில் நடந்த, காங்கிரஸ் பிரசார கூட்டத்தின் போது, மேடை திடீரென சரிந்ததில், பிரபல நடிகை, விஜயசாந்தி உள்ளிட்டோர் கீழே விழுந்தனர்; அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
தெலுங்கானாவில் 120 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், டிச., 7ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறது. மெகபூபா நகர், அசம்பட்டு பகுதியில், சமீபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது.
இதில், நடிகையும், காங்கிரஸ் கட்சி பேச்சாளருமான, விஜயசாந்தி, கட்சியின் மாநில செயல் தலைவர், மல்லு பட்டி விக்ரமர்க்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விஜயசாந்தியை பார்ப்பதற்காக, கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் அதிக அளவில் குவிந்திருந்தனர்; மேடையிலும் அதிகமானோர் நின்றிருந்தனர். அப்போது, திடீரென மேடை சரிந்தது. இதில், விஜயசாந்தி உள்ளிட்டோர் மேடையில் இருந்து கவிழ்ந்து விழுந்தனர். ஆனால், 'யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-அக்-201811:03:22 IST Report Abuse
Nallavan Nallavan பலமுறை சரிந்தவர்தான் .....
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
15-அக்-201816:07:17 IST Report Abuse
kalyanasundaram shortly it will be the condition of khangress
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-அக்-201812:04:45 IST Report Abuse
தமிழ்வேல் மேடைக்கு காசு கொடுத்திருக்க மாட்டானுவோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X