நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜகோபாலன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜகோபாலன்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜகோபாலன்

திருப்பதி:திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் காலை மலையப்பஸ்வாமி கல்பவிருட்ச வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார்.
திருமலையில், கடந்த புதன்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன், 4ம் நாளான, நேற்று காலை, கல்பவிருட்ச வாகனத்தில், மலையப்பஸ்வாமி மன்னார்குடி ராஜகோபாலன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், மதியம் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.இரவு, 8 மணிக்கு தங்கத்தால் ஆன சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பஸ்வாமி வலம் வந்தார்.
இதை காண, லட்சகணக்கான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்கு பின் நாடெங்கிலுமிருந்து வந்த கலை குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன சேவைக்கு முன் கல்பவிருட்ச மற்றும் சர்வபூபால வாகன சேவை புகைப்படங்கள் கொண்ட அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X