சென்னை, கோவையில் விரைவில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, கோவையில் விரைவில்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சென்னை, கோவையில் விரைவில்

கோவை:''சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், சென்னையில், 80 மின்சார பஸ்களும், கோவையில், 20 மின்சார பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, 43 புதிய பஸ்களில், கோவை மண்டலத்தில், 10 பஸ்கள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.இந்த பஸ்கள் கோவையில் இருந்து ராமேஸ்வரம், திருச்சி, திருவண்ணாமலை, சிவகாசி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
கோவை, உக்கடம்பஸ் ஸ்டாண்டில், அமைச்சர் வேலுமணி பஸ் சேவையை துவக்கிவைத்து கூறியதாவது:கோவை கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, இந்த, 43 பஸ்களின் மதிப்பு, 10.75 கோடி ரூபாய்.தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பஸ் சேவை வழங்கப்பட்டு, பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில், சாலைகள் விரிவுபடுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறைந்துள்ளன.சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக, இங்கிலாந்து நாட்டின், 'சி40' என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில், 80 மின்சார பஸ்களும், கோவையில், 20 மின்சார பஸ்களும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthi - Covai,இந்தியா
15-அக்-201810:32:08 IST Report Abuse
sakthi 43 பஸ்களின் மதிப்பு, 10.75 கோடி ரூபாய். அப்படின்னா ஒரு பஸ் 25 லட்சம் தானா? ரொம்ப சீப் ஆக இருக்கே ? 2 வருடம் ஓடுமா? ஏன்டா இப்படி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்?
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
16-அக்-201805:32:22 IST Report Abuse
 nicolethomsonஅட நீங்க வேற, ஒரு பஸ்ஸோட மதிப்பா இருக்க போவுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X