போலீசாருக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 போலீசாருக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

கடலுார்:மாவட்டத்தில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சாலை பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி., சரவணன் வழங்கினார்.கடலுாரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற எஸ்.பி., சரவணன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி. மாவட்டத்தில் உள்ள 4 போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 50 போலீஸ் ஸ்டேஷன்கள், ஏழு அதிரடிப்படை வாகனங்களுக்கு 26 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது.எஸ்.பி., சரவணன் கலந்து கொண்டு, சாலையில் வளைவு இடங்களில் ஒளிரும் சோலார் பிரதிபலிப்பான், வேக தடுப்பு கட்டை, போக்குவரத்து கூம்பு, காவல் வாகனத்திற்கு லைட் பார், வாகன தணிக்கை மேற்கொள்ள வெள்ளை மற்றும் ஆரஞ்ச் பிரதிபலிப்பான் ஆடைகள், கையுறைகள், மூக்கு முகமூடி, தடுப்புக் கட்டை நாடா, பிரதிபலிப்பான் நாடா, விபத்து மற்றும் சாலை பழுதை சுட்டிக்காட்ட கோள் விளக்கு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வண்ணம் பொது மக்களுக்கு விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு ஒலி பெருக்கி, இரவில் விபத்து மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் டார்ச் லைட், அபாயகரமான இடங்களில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை பிரதிபலிப்பான் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி.,கள் வீரராகவன், வேதரத்தினம், ஏ.எஸ்.பி., தீபா சத்தியன், டி.எஸ்.பி.,க்கள் லாமேக், பாண்டியன், சுந்தரவடிவேல், ஜவகர்லால், தங்கவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X