புரட்டாசி 4ம் சனி சிறப்பு வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி 4ம் சனி சிறப்பு வழிபாடு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புரட்டாசி 4ம் சனி சிறப்பு வழிபாடு

கடலுார்:திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.திவ்ய தேசங்களில் ஒன்றான கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 4ம் சனிக்கிழமையொட்டி நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை முடிந்து 4:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.நவராத்திரிபுதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நவராத்திரியொட்டி நேற்று மாலை செங்கமலத் தாயார், பெருமாள், கோவில் உள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.புரட்டாசி 4ம் சனிக்கிழமையொட்டி மூலவர் ராஜகோபாலன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை முதல், மாலை வரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பரங்கிப்பேட்டைவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள், அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி, சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, சாற்றுமுறை சேவை உள்ளிட்ட அலங்காரங்களில் அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X