பாரதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பாரதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி:உலக அளவில் நடந்த இசை போட்டியில் வெற்றி பெற்ற பாரதி ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.கோவாவில் உலக அளவில் இரு நாட்கள் நடந்த இசைப்போட்டியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். இதில்,கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களும் பங்குபெற்றனர். கீ போர்டு குழு போட்டியில் 9 ம் வகுப்பு மாணவர்கள் கனிஷ்ராகவர், அஜய் ஆகியோர் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். தனிப்பிரிவு போட்டியில் அஜய் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.உலக அளவிலான இசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலெக்டர் சுப்ரமணியினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும்,பாரதி கல்வி நிறுவனத்தின் செயலர் லஷ்மி கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பாரத்குமார் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இம்மாணவர்கள் வரும் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெறும் இசைப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X