துவக்கம்: தோட்டக்கலை பயிற்சி மையத்தில் பட்டய படிப்பு. ரெட்டியார்சத்திரம் உட்பட 2 பகுதியில் இந்தாண்டு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துவக்கம்: தோட்டக்கலை பயிற்சி மையத்தில் பட்டய படிப்பு. ரெட்டியார்சத்திரம் உட்பட 2 பகுதியில் இந்தாண்டு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம், தளி தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இரண்டாண்டு தோட்டக்கலை பட்டய படிப்பு துவங்க அரசு திட்டமிட்டுள்ளது.திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் இந்தோ- இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் ரூ.10:18 கோடியில் 13.40 ஏக்கரில் காய்கறி மகத்துவ மையம் செயல்படுகிறது. காய்கறிகள் விளையவைப்பதுடன், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலை படிப்பில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தோட்டக்கலையை ஊக்குவிக்கும் வகையில் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதி பயிற்சி மையங்களில் இரண்டாண்டு பட்டய படிப்பை இந்தாண்டு துவங்க அரசு முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வில் உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண் கோட்பாடு மற்றும் செயல்முறை, பயிர் உற்பத்தி கோட்பாடு மற்றும் செயல்முறை பாடம் எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி மையம் அல்லது தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ.200 செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ரூ.225க்கு வங்கியில் வரைவோலை (டி.டி.,) எடுத்து அக்.31 மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் வயது 25 க்குள், மற்ற பிரிவினர் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம், தொலைபேசி 0451-246 0522, தளி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், அலைபேசி 8489457185 ல் பேசலாம், என தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X