ஸ்ரீவி.,யில் ராஜகோபுரம் வழியாக அனுமதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி.,யில் ராஜகோபுரம் வழியாக அனுமதி

Added : அக் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஸ்ரீவி.,யில் ராஜகோபுரம் வழியாக அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ராஜகோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுடன் இணைந்த, வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ளது.பல ஆண்டுகளுக்குமுன், குண்டு மிரட்டல் காரணமாக, ராஜகோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்து சமய ஆகமவிதிப்படி, ராஜகோபுரத்தின் வழியாக தான் கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, இந்து அமைப்புகள், ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன.இந்நிலையில், ராம்கோ நிறுவனம் சார்பில், 4 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுர வாசல், ஆண்டாள் கோவில் நுழைவு வாசலில், நவீன மெட்டல் டிடெக்டர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் வாசல் திறக்கப்பட்டு, ராஜகோபுரம் பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201811:52:24 IST Report Abuse
Bhaskaran ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னம் சென்றமுறை கருணாநிதி முதல்வராக இருக்கும்போது வி சி.க.உறுப்பினர் மூலம் தீர்மானம் கொண்டுவந்து இதை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு பின் கைவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201808:51:02 IST Report Abuse
Srinivasan Kannaiya கோவிலே என்றால் கோபுரம்,வாசல் வேணும்... அது வழியாதான் உள்ளே போகணும்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-அக்-201808:27:30 IST Report Abuse
தேச நேசன் தமிழக அரசின் முத்திரைச்சின்னம் மதுரைக்கோவில் கோபுரம் தான். இதனை ஓவியரின் குடும்பத்தாரே சொல்கின்றனர் ..அது 1949 ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது.. மதுரை மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரத்தை அடிப்படையாக வைத்து வடிவமைத்தார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X