வைகை அணையில் ரூ.3 கோடியில் பயணியர் விடுதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் ரூ.3 கோடியில் பயணியர் விடுதி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி:வைகை அணையில் பொதுப்பணித்துறை புதிய கட்டடம், பயணிகள் தங்கும் விடுதிகள் கட்ட ரூ. 3 கோடியில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வைகை அணை மற்றும் பூங்கா கட்டப்பட்டு 50 ஆண்டுக்கும் மேலாகிறது. தொலைதுாரத்தில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்கி செல்ல பொதுப்பணித்துறை மூலம் தங்கும் விடுதிகள் உள்ளன. 50 ஆண்டுகளைக்கடந்த இக்கட்டடங்கள் பலவும் தற்போது சேதம் அடைந்து விட்டன. முதல் வகுப்பு தங்கும் விடுதி மட்டும் தற்போது பயன்படுத்தும் நிலையில் உள்ளது. பயணிகள் தங்குவதற்கான இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பிரிவு கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் அடைந்துள்ளது.வைகை அணை பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர், வலது கரை, இடது கரை பிரிவுகளுக்கான அலுவலக கட்டடங்களும் சேதமடைந்து விட்டன. இவற்றில் அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளும் இல்லை.

இவற்றை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அலுவலக கட்டடம், பயணிகளுக்கான தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X