கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெண் ஊழியர் திடீர் மரணம்
சென்னை, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலையில், அமீர்ஜான் என்பவர், 21ம் தேதி, பிரியாணி கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார். அதற்கான உட்கட்டமைப்பு பணிகளில், அசாம் மாநிலம், திரிபுராவைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் ஓர்த்தி, 21, என்ற பெண், நேற்று முன் தினம் இரவு மயக்கமடைந்தார். அவரை மீட்ட அஜ்மீர், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, ஓர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
சென்னை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய தண்டவாளத்தை, நேற்று மதியம், 12:30 மணியளவில், 55 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்தார். அப்போது, அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் ஓட்டுனர் தீ குளித்து தற்கொலை
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர், அபிமன்யூ, 37; கார் ஓட்டுனர். போதிய வருமானம் இல்லாததால் மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் ஊற்றி தீ குளித்தார். இதில், சம்பவ இடத்திலேயே பலியானார். விருகம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
மரம் விழுந்ததில் பெண் பலி
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரேமா, 72. இவரது மகள் சாந்தி, 48.இருவரும், நேற்று மாலை, சைதாப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். கிண்டி, 'ஸ்பிக்' நிறுவனம் அருகில் சென்றபோது, சாலையோர உள்ள மரம், பிரேமா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பிரேமா, மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார்; சாந்தி, லேசான காயமடைந்தார்.கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மர்ம சாவு
திருமுல்லைவாயல், வடக்குமாட வீதியைச் சேர்ந்தவர், சாந்தி, 55; கணவரை இழந்தவர்.இவரது மகள் லலித், துபாயிலும், மகன் நாகராஜ், அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.மூட்டு வலிக்காக, 'சர்ஜிக்கல் ஸ்பிரிட்' என்ற மருந்தை, சாந்தி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.நேற்று முன்தினம், மயங்கிய நிலையில் சாந்தியை மீட்ட, அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சாந்தி இறந்துவிட்டதாக கூறினர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X