பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்பணர்வு ஊர்வலம் நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து துவங்கிய மாணவர்களின் ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., தினேஷ் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., ராமநாதன், தாசில்தார் தயாளன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் கமலக்கண்ணன், ரோட்டரி தலைவர் மதியழகன், செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய செய்முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர். ஊர்வலத்தை பள்ளி உடற்பயிற்சி இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் ஜெயக்குமார், வாசு, வருவாய்த்துறை உதவியாளர் கனவான் ஆகியோர் வழிநடத்தினர்.திருக்கோவிலுார்: அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சர்வதேச பேரிடர் குறைப்பு தின நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார்.தாசில்தார் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி‚ புயல்-கனமழை காலங்களில் செய்திட வேண்டியது மற்றும் செய்யக் கூடாதது குறித்தும்‚ பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கி, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன்‚ மண்டல துணை தாசில்தார்கள் பசுபதி‚ செந்தில்குமார்‚ வருவாய் ஆய்வாளர் புருஷாத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செஞ்சி: ராஜா தேசிங்கு அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை தாசில்தார் ரங்கநாதன் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர்கள் கணபதி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெகருன்னிசா, ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஆதிபகவன், மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காந்தி பஜார் வழியாக சென்ற ஊர்வலம் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில்முடிவடைந்தது. அங்கு செஞ்சி தீயைணைப்பு நிலைய அலுவலர் பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் கால முன்னெச்சரிக்கை, மீட்பு நடவடிக்கைகளை செய்து காண்பித்தனர்.திண்டிவனம்: காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சப் கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தது.அதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு துறை சார்பில், பேரிடர் கால பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி சந்தானகுமார், முன்னணி தீயணைப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு, பேரிடர் கால மேலாண்மை குறித்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., திருமால், நகராட்சி கமிஷனர் ஸ்ரீ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சப்-கலெக்டர் விமல்ராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் காமராஜ் வரவேற்றார்.தீ விபத்துகளில் சிக்கியோரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினர்.கண்டாச்சிபுரம்: பஸ் நிலையம் அரகில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் புஷ்பாவதி, கூடுதல் தாசில்தார் பாலமுருகன், சப் -இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி முன்னிலை வகித்தனர். திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில், புயல் ,தீ விபத்து மற்றும் மழைக்காலங்களில் நிகழும் பேரிடர்களை சமாளிப்பது குறித்தும்,அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விழுப்புரம்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை டி.ஆர்.ஓ., பிரியாதுவக்கி வைத்தார்.தீயணைப்பு வீரர்கள், விபத்து மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வுசெயல் விளக்கம் அளித்தனர்.அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கார்த்திகேயன், துணை ஆட்சியர்(பயிற்சி) வித்யா, பி.ஆர்.ஓ.,சிவகுரு, டி.எஸ்.பி., சங்கர், மாவட்ட தீயணைப்புஅலுவலர் முகுந்தன், தாசில்தார் சுந்தர்ராஜன், மேலாண்மை தாசில்தார் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X