விழுப்புரம் ரோட்டரி சங்கம் முன்னோர் உலக திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ரோட்டரி சங்கம் முன்னோர் உலக திருவிழா

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 விழுப்புரம் ரோட்டரி சங்கம் முன்னோர் உலக திருவிழா

விழுப்புரம்:விழுப்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை பசுமைப்பாதை அமைப்பு இணைந்து வாழ்வியல் பயிற்சி முகாம் நடந்தது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள ஜெயசத்தி மண்டபத்தில் நடைபெறும் மூன்று நாள் முகாமின் துவக்க நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் புதுராஜா தலைமை தாங்கினார். பசுமைப்பாதை அமைப்பு மைக்கேல் ராஜ் வரவேற்றார். உறுப்பினர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இயற்கை வேளாண் முறைகள் குறித்து வல்லுநர் அனுராதா நடராஜனும், சண்முகம் சோற்றுகற்றாழை பயன்கள் பற்றியும் விளக்கினர்.முகாமில், இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, பாரம்பரிய உணவு, மரபுவழி மருத்துவ முறை, தற்காப்பு கலைகள், கிராமிய கலைகள் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, மண்பாண்டங்கள் தயாரிப்பு, மண் பொம்மைகள் உருவாக்கம், காய்கறிகள் சிற்பம், சுண்ணாம்பு கோல் நுண் செதுக்கல், தென்னை, பனை ஓலை மற்றும் காகித பொருட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நஞ்சில்லா உணவு பொருட்களை தயாரிக்கும் முறைகள் சம்பந்தமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.துவக்க விழாவில், ரோட்டரி நிர்வாகிகள் சரவணக்குமார், துரைராஜ், சாமிக்கண்ணு, சுரேஷ், சிவகுமார், சரவணகிருஷ்ணன், அசோக்குமார், நாகராஜன், சுகுமாரன், முரளி, சிதம்பரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X