கார் மோதி விவசாயி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி விவசாயி பலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்:நடந்து சென்ற விவசாயி, அடையாளம் தெரியாத கார் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 65; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் இருந்து திருச்சி-சென்னை புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு, நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற, அடையாளம் தெரியாத வெள்ளை நிற கார், செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.அதில் படுகாயமடைந்த செல்வராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். விபத்து குறித்து, ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X