உத்தமபாளையம் கோயிலில் அன்னதானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உத்தமபாளையம் கோயிலில் அன்னதானம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்தமபாளையம்:உத்தமபாளையத்தின் மையப்பகுதியில் தொன்மையான யோகநரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. அரக்கனை வதம் செய்து தீராத கோபத்துடன் வந்த பெருமாள் இங்கு சாந்தமாகி அமர்ந்த இடமாகும். இக்கோயில் திருப்பணி நடந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் சில ஆண்டுக்குமுன், மீண்டும் இதற்கான பணிகளை ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் மேற்கொண்டனர். ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், அதனைத் தொடர்ந்து கும்பாபிேஷகம், 48 வது நாளில் மண்டல பூஜையும் நடந்தது.இவை அனைத்தும் தடங்கலின்றி நடந்ததற்காக நேற்று காலை கோயில் வளாகத்தில் ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் சார்பில் அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பக்த சபை தலைவர் அய்யப்ப பிள்ளை, செயலர் ராயல்ரவி , நிர்வாகிகள் செய்தனர். முன்னதாக புரட்டாசி சனியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X