ஏலக்காய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம்:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 200 வீதம் கேரள அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அப்பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.சமீபத்திய கன மழை வெள்ளத்தில் சிக்கி கேரள மாநிலம் உருக்குலைந்து போனது. ரூ. 800 கோடி மதிப்பிலான வாசனைதிரவிய பொருள்கள் சாகுபடி பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் 90 சதவீதஏலத்தோட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏலச்செடிகள் ஒடிந்து விழுந்து விட்டன. மரங்கள் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது. இதனால் ஏலத்தோட்டங்களை மறுசீரமைக்க விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏலத்தோட்ட பாதிப்பு விபரங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்க கேரள அரசு வலியுறுத்தியது. அதன்படி அவர்கள் விண்ணப்பங்களை அளித்தனர். அதனை பரிசீலனை செய்தஅரசு, ஒரு விண்ணப்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 200 வீதம் நிவாரணம் வழங்கியுள்ளது.

ஏல விவசாயிகள் கூறுகையில், ' எக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 200 வீதம் கேரள அரசு வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இது ஆறுதல் தரும் விஷயமாகும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X