பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தேனி:மாவட்டத்தின் பல்வேறு பகுதி பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.தேனி அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந் தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அலங்காரத்தை கார்த்திக் பட்டாச்சியர் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.* போடி மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம்: பெரியகுளம் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்திலும், உற்ஸவர் கருடவாகனத்திலும் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ராதே, கிருஷ்ணருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. 14 மணி நேரம் அகண்ட ஹரே ராமகீர்த்தனம் பாடப்பட்டது. பாம்பாற்று ராமபக்தர் ஆஞ்சநேயர் கோயிலில், மூலவர் வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும், உற்ஸவர் மலர் அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.தேவாரம்: கோம்பை திருமலை ராயப்பெருமாள் மலைக்கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சுயம்பு மூலவருக்கு இளநீர், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. நவராத்திரி விழா நடப்பதால், ஊர்க்கோயிலில் உள்ள கொலுமண்டபத்தில் உற்சவர் எழுந்தருளுகிறார். அதற்கு பதிலாக சக்கரத்தாழ்வாருக்கு மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் வசதிக்காக கோம்பையிலிருந்து மலையடிவாரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. உழவாரப் பணிக்குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.*அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப் பெருமாள் கோயிலில் உற்சவருக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வடை பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X