காட்டுமாடுடன் 'செல்பி' எடுக்க ஆர்வம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுமாடுடன் 'செல்பி' எடுக்க ஆர்வம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரியகுளம்:சோத்துப்பாறை- அகமலை மலைப்பகுதியில் வனத்துறை கண்காணிப்பு இல்லாததால், சுற்றுலா பயணிகள் சிலர் காட்டுமாடுடன் செல்பி'எடுக்கும் அத்துமீறல் தொடர்கிறது.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. அங்கிருந்து 20 கி.மீ., தொலைவில் அகமலை உள்ளது. முழுக்க, முழுக்க மலைப்பகுதி ரோட்டில் செல்லவேண்டும். வனப்பகுதிக்குஉட்பட்டது. கன்னக்கரைக்கும், அகமலைக்கும் இடையே நீர்நிலைப்பகுதிகளில் தண்ணீரை தேடி காட்டுமாடு கும்பலமாக, ரோட்டோரப் பகுதிகளில் செல்கிறது. டூவீலரில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், காட்டுமாடுகளுக்கு வழிவிடாமல் 'செல்பி' எடுப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். அதனை செல்பி பதிவிற்குள் கொண்டுவர, குச்சியை எடுத்து விரட்டுகின்றனர். கும்பலாக வந்த காட்டுமாடு, தனித்தனியாக ஓடுகிறது. மலைத்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். விளை பொருட்கள் சேதமாகிறது.தனியாக வரும் காட்டுமாடும் செல்பி அச்சுறுத்தலில் சிக்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் காட்டுமாடு முட்டி 10 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது தெரியாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நடக்கின்றனர். இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X