செய்திகள் சில வரிகளில்...1| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...1

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மேட்டூர் அணை 3 அடி உயர்வு
மேட்டூர்: தமிழகம் - கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. நேற்று, நீர்மட்டம், 104.18 அடியாக இருந்தது. ஒரு வாரத்தில், நீர்மட்டம், 3 அடி உயர்ந்துள்ளது. மொத்த நீர்மட்டம், 120 அடி.
குண்டாசில் வாலிபர் கைது
அரக்கோணம்: வேலுார் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவன் மோகன்பாபு, 20, இவனை, வழிப்பறி வழக்கில் கடந்த மாதம் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர். இவன் மீது, 20க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த தங்கவேல் மனைவி பரிமளா, 50; நேற்று காலை, 8:00 மணிக்கு, தன் வீடு அருகே, சாலையில் நடந்து சென்றார். பைக்கில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த, 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் ஊழியர் கைது
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றுபவர், ஜெயந்தி, 47. இவர், மூன்று பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 50 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றினார். ஜெயங்கொண்டம் போலீசார், ஜெயந்தியை நேற்று கைது செய்தனர்.
சந்தன மரம் வெட்டிய நால்வர் கைது
கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு, சாலையோரத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்த, நால்வர் முயன்றனர். வன ஊழியர்களை பார்த்ததும், தப்பியோடினர். வன ஊழியர்கள் விரட்டி பிடித்து கைது செய்தனர். அப்பகுதியில் வெட்டப்பட்ட, 4 அடி நீள சந்தன மரத் துண்டையும் பறிமுதல் செய்தனர்.
நவதிருப்பதியில் அலைமோதிய பக்தர்கள்
திருநெல்வேலி: நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி மகாபுஷ்கர விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று புராட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் கருட சேவை நடந்தது
.டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சல்
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிபவர் கல்யாண்குமார், 48. இவருக்கு நான்கு நாட்களாக, காய்ச்சல் இருந்தது. ரத்தப் பரிசோதனையில், பன்றிக்காய்ச்சல் உறுதியானது.இவரது டாக்டர் மனைவி, மாமனார், மாமியாருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், நால்வருக்கும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 48, என்பவரும் பன்றிக்காய்ச்சல் தாக்கி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு
திருச்சி: திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் இருந்த பழமையான அணையின் ஒன்பது மதகுகள், ஆக., 22ல் இடிந்து விழுந்தன. இங்கு புதிய அணை கட்டுவதற்காக, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தயாரித்த வரைபடத்தை வைத்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாய் கவ்வி வந்த பெண் சிசு
திருச்சி: திருச்சி, மணப்பாறை பாரதியார் நகர் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், நாய் ஒன்று, தொப்புள் கொடியுடன் குழந்தையை கவ்வி வந்தது. முதியவர் பார்த்து விரட்டியதால், சிசுவை போட்டு, ஓடியது. போலீஸ் விசாரணையில், 'குறை பிரசவத்திலோ, கள்ளக்காதல் உறவிலோ பிறந்து, குப்பைத் தொட்டியில் வீசியதில் இறந்திருக்கலாம்' என, தெரியவந்தது. சிசுவின் தாய் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X