திண்டிவனத்தில் இருதய பரிசோதனை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் இருதய பரிசோதனை முகாம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திண்டிவனத்தில் இருதய பரிசோதனை முகாம்

திண்டிவனம்:திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் சார்பில், இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடந்தது.திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கமும், பி.ஆர்.எஸ்., துணிக்கடை மற்றும் செட்டிநாடு மருத்துவமனையும் இணைந்து வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நண்பர்கள் அரிமா சங்க தலைவர் உதயக்குமார் தலைமை தாங்கினார்.மண்டல தலைவர் ரமேஷ், வட்டார தலைவர் சைமன் துரைசிங், மாவட்ட தலைவர் வெங்கடேசன், சதாசிவம் முன்னிலை வகித்தனர். பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், மாவட்ட ஆளுநர் சரவணன் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், 80 பயனாளிகள் சிகிச்சை பெற்றனர்.நிகழ்ச்சியில், வழக்கறிஞர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் தேவ், முரளிகிருஷ்ணன், ஆனந்தராஜ், இளம் அரிமா சங்க நிர்வாகிகள் தனசேகர், செந்தில், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X