நீலக்குறிஞ்சி டிக்கெட் கவுன்டரை மாற்ற வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலக்குறிஞ்சி டிக்கெட் கவுன்டரை மாற்ற வலியுறுத்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மூணாறு:மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. அவற்றைப் பார்க்க இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு மட்டும்\சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.ராஜமலையில் அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளதால் அவற்றைப்பார்க்க வரையாடுகளின் பிரசவ காலம் தவிர, ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு ஐந்தாம் மைல் பகுதியில் நுழைவு சீட்டு பெற்று, அங்கிருந்து வனத்துறையினரின் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.தற்போது குறிஞ்சி பூக்களை பார்க்க அதிகமாக பயணிகள் வந்து செல்வார்கள் என கணக்கிட்டு ஐந்தாம் மைலில் செயல்பட்டு வந்த டிக்கெட் கவுன்டரை, பழைய மூணாறில் உள்ள உயர்தர விளையாட்டு பயிற்சி மையத்திற்கு மாற்றினர்.அதனால் மூணாறு நகரில் சுற்றுலா தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது.குறிப்பாக சுற்றுலா கார் டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிஞ்சியை பார்க்க எதிர்பார்த்த பயணிகள் கூட்டம் இல்லை.எனவே பழைய மூணாறில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்டரை, மீண்டும் ஐந்தாம் மைல் பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது தற்போது டிக்கெட் கவுன்டர் செயல்படும் இடத்தில் சுற்றுலா கார்களுக்குபிரீ பெய்டு' வசதி ஏற்படுத்தவேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி.,யைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் நாளைடிக்கெட் கவுன்டர் முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததுடன் அதற்காக நுழைவு வாயிலில் கொடிகளை நாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X