திண்டிவனம் அரசு மருத்துவமனை நோயாளிகள் திடீர் முற்றுகை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அரசு மருத்துவமனை நோயாளிகள் திடீர் முற்றுகை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 திண்டிவனம் அரசு மருத்துவமனை நோயாளிகள் திடீர் முற்றுகை

திண்டிவனம்:திண்டிவனம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் டாக்டர் இல்லாததால், நோயாளிகள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.திண்டிவனம், முருங்கப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி காலை 7:30 மணி முதல் பகல் 12:00 மணிவரையிலும், மாலை 3:00 மணி முதல் 5:00 மணிவரைபுற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நேற்று மாலை 4:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்டோர், டாக்டரை பார்ப்பதற்காக நுழைவு சீட்டு வாங்க வரிசையில் நின்றனர். நுழைவு சீட்டு பெற்ற புறநோயாளிகள், 30 நிமிடத்திற்கு மேலாக காத்திருந்தும் டாக்டர் வரவில்லை. ஆத்திரமடைந்த நோயாளிகள், டாக்டர் அறையை முற்றகையிட்டு கூச்சலிட்டனர்.தகவலறிந்த புற நோயாளிகள் பிரிவிற்கு வந்த டாக்டர், அடிபட்டு வந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க விபத்து சிகிச்சை பிரிவுக்கு சென்றதால் தாமதமாகியதாக டாக்டர் கூறினார். பின்னர் அனைவரும் டாக்டரிடம் உடலை பரிசோதித்து, சிகிச்சை பெற்று சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X