திராட்சையில் பறவை தடுப்பு வலை அமைக்க மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திராட்சையில் பறவை தடுப்பு வலை அமைக்க மானியம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களில் 1,850 எக்டேரில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கருப்பு பன்னீர், விதையில்லா தாம்சன், சரத், ரெட் குளோப் ரகங்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. விளைச்சல் அதிகமாக இருந்தாலும், காகங்களால் பழங்கள் அதிகம் சேதமடைகின்றன. இதனை தடுக்க பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.தோட்டக்கலை துறையின் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், பறவை தடுப்பு வலைகளுக்கு மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.17.50 வழங்கப்படுகிறது. ஒருவருக்கு 500 சதுர அடி வரை மானியம் பெறலாம். விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று மானியத்தை பெறலாம்.மேலும் விபரங்களுக்கு வட்டார அலுவலர்கள் சின்னமனுார் 97896 12110, கம்பம் 97901 80549, உத்தமபாளையம் 94420 91115 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் ,என ,மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் கி ேஷார்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X