லஞ்சம் வாங்கி கைதான வனச்சரகர், 'சஸ்பெண்ட்' | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கி கைதான வனச்சரகர், 'சஸ்பெண்ட்'

Added : அக் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலுார்:லஞ்சம் வாங்கி கைதான வனச்சரகர் பணியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், தெக்கூரைச் சேர்ந்தவர் ராமன், 60; விவசாயி. வனப்பகுதியையொட்டி உள்ள அரை ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்ததாக, அமிர்த்தி வனச்சரகர் ராஜா, கடந்த, 8ல் விசாரணை நடத்தினார்.அப்போது, ராமனிடம், 'கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என, ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் ராமன் புகாரளித்தார்.கடந்த, 10ல், அமிர்த்தி வனச்சரக அலுவலகத்தில், ரசாயனம் தடவிய, 60 ஆயிரம் ரூபாயை, ராஜாவிடம், ராமன் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ராஜாவை கைது செய்தனர். தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங், நேற்று, ராஜாவை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-அக்-201808:00:19 IST Report Abuse
Amirthalingam Sinniah இங்கும் ஒரு ராஜாவா?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:20:33 IST Report Abuse
Bhaskaran இவனுகளையெல்லாம் டிஸ்மிஸ் செய்யறதைவிட்டு சஸ்பெண்ட் என்னத்துக்கு இந்த ஜென்மங்கள் எந்தக்காலத்திலும் திருந்தப்போவதில்லை பிறப்பெடுத்ததே லஞ்சம் வாங்கத்தான் என்றுநினைக்கும் ஈன பிறவிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X