சேதமடைந்த 'ஷட்டர்' வழியாக வீணாகுது கண்மாய் தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த 'ஷட்டர்' வழியாக வீணாகுது கண்மாய் தண்ணீர்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி நகருக்கு நிலத்தடி நீராதாரமாய் விளங்கும் மீறுசமுத்திரம் கண்மாய் துார்வாரப்படாமல் ஷட்டர் பகுதி இடியும் நிலையில் உள்ளதால் , தொடர் மழையால் வந்த தண்ணீர் வீணாக மறுகால் பாய்கிறது.தேனியில் கடந்த 5 ஆண்டாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. எனினும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க மீறுசமுத்திரம் கண்மாய் கைகொடுத்தது. இது பல ஆண்டாக துார்வாரப்படாமல் இருக்கிறது. கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். 10 அடி அகலம் இருந்த கால்வாய் தற்போது 3 அடியாக சுருங்கியுள்ளது. சில இடங்களில் முழுவதும் மண்மேவப்பட்டு தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். வலுவிழந்திருந்த கண்மாய் கரை, கடந்த சில மாதங்களுக்கு முன் பாதி மட்டும் வலுப்படுத்தப்பட்டது. மறுகால் செல்லும் இடத்தில் ஷட்டர் பகுதியின் இருபுறமும் உடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.வீணாகும் நீர்: 10 ஏக்கர் கண்மாயில் 4 ஏக்கர் மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. கண்மாய் முழுவதும் ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனால் முழுமையாக தண்ணீர் தேக்க முடியவில்லை. சமீபத்தில் பெய்த தொடர்மழையால், கண்மாய் மறுகால் பாய்கிறது. சேதமடைந்துள்ள மறுகால் பகுதியில் இருந்து அதிக நீர் வீணாகி வருகிறது. அதனை சீரமைத்து ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் முழுமையாக தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X