அரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது

விழுப்புரம்,:விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்சுமேனாக பணிபுரிகிறார். இந்த மருத்துவமனை பிரசவ வார்டில், விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த இளையபெருமாளின், உறவினர் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு துணையாக, இளையபெருமாளின் மனைவி சுபஸ்ரீ நேற்று முன்தினம் மருத்துமனையில் இருந்துள்ளார்.இவரை பார்க்க, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, இளையபெருமாள், அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த வாட்சுமேன் ராஜா, அவர்கள் போதையில் இருந்ததால், உள்ளே அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த மூவரும், ராஜா மற்றும் துப்புரவு பணியாளர் மணிகண்டன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து இளையபெருமாளை,39; கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X