செய்தி சில வரிகளில்... தேசியம்| Dinamalar

செய்தி சில வரிகளில்... தேசியம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மான நஷ்ட வழக்கு
புதுடில்லி: பிரபல பாலிவுட் நடிகர், அலோக் நாத், 62, பல ஆண்டுகளுக்கு முன், தன்னை பலாத்காரம் செய்ததாக, பெண் க
தாசிரியரும், 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளருமான, வின்டா நந்தா, சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதையடுத்து, வின்டா நந்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தில், அலோக் நாத், மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.


சிவசேனா மிரட்டல்


திருவனந்தபுரம்: 'கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.கொச்சியில் நேற்று, ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 'சபரிமலைக்கு, இளம் வயது பெண்கள் வர முற்பட்டால், பம்பை நதிக்கரையிலேயே கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம்' என, சிவசேனா கட்சியைச் சேர்ந்த, பெண் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
மதரசாவில் சமஸ்கிருத பாடம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், 'ஏரிகள் நகரம்' என்றழைக்கப்படும், உதய்பூரில் உள்ள ஒரு மதரசா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, சமஸ்கிருத பாடம் கற்றுத் தரப்படுகிறது. இதற்காக, சமஸ்கிருத ஆசிரியர் ஒருவரை மதரசா நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்கள், மூன்றாவது மொழி பாடமாக உருதுக்கு பதில், சமஸ்கிருதத்தை படிக்கின்றனர்.
நடிகர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவோம்' என, மலையாள நடிகர், 'கொல்லம் துளசி' எனப்படும் துளசிதரன் நாயர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பயங்கரவாதி சுட்டு கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், நேற்று காலை, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். பாரமுல்லா மாவட்டத்தில், ஒரு வீட்டுக்குள் நுழைந்த, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், ஜாவித் அஹமது லோன் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார்.
குழந்தைகளுடன் தாய் தீக்குளிப்பு
பண்டா: உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த, பிரேமாவதி, 28, என்ற பெண், கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்து, தன்னுடைய நான்கு குழந்தைகளின் கை, கால்களை கட்டி, தீயிட்டு கொளுத்தியதுடன், தானும் தீக்குளித்தாள். இந்த சம்பவத்தில், தாயும், மூன்று குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை உயிருக்கு போராடி வருவதாக போலீசார் கூறினர்.


மோடி பாடலுக்கு நடனம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்த போது, குஜராத்தி மொழியில், சில கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். அதில் ஒரு பாடலுக்கு, பார்வையற்ற மாணவியர், 200 பேர், 'கர்பா' நடனம் ஆடி அசத்தியுள்ளனர். நவராத்திரி விழாவையொட்டி, பிரதமர் மோடி, தன் சமூக வலைதள பக்கத்தில், இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார் - லாரி மோதல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், சுற்றுலா சென்ற கார், லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகி உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மூன்று பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
'பேஸ்புக்' காதலன் கொலை
ரோஹ்தக்: ஹரியானா மாநிலம், ரோஹ்தக்கில், மனைவியின், 'பேஸ்புக்' காதலனை கொலை செய்து, உடலை மறைத்துவிட்டு தப்பியோட முயன்ற கணவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், ஜம்முவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிவது தெரிய வந்தது. இந்த வழக்கில், மனைவியையும், அவளது சகோதரனையும், போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X