இனி, தில்லுமுல்லு செய்ய முடியாது ரேஷன் கடை ஊழியர்களுக்கு 'செக்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி, தில்லுமுல்லு செய்ய முடியாது ரேஷன் கடை ஊழியர்களுக்கு 'செக்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:ரேஷன் கடைகளில் பயன்படுத்தும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை, இனி, வெளியே எடுத்துச் சென்றால், அதன் செயல்பாடு முடங்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.கோவை மாவட்டத்தில், 1,404 ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி, பயனாளிகளுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது. கருவியில் கார்டை ஸ்கேன் செய்து, பொருள் வழங்கியதும், கார்டுதாரர் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.
கடைக்காரர்களில் சிலர், வாடிக்கையாளரிடம் பெறும், 'ஸ்மார்ட் கார்டு'களை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். வழக்கமான பணியை முடித்ததும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பொருள் பெறாத கார்டுதாரர்களின் கலர் ஜெராக்ஸ்களை, 'ஸ்கேன்' செய்து, ஒதுக்கீடுகளுக்கு கணக்கு காட்டுகின்றனர். அப்பொருட்களை, சந்தையில் விற்கின்றனர்.இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை, கடையில் இருந்து, வெளியே எடுத்துச் செல்ல முடியாத வகையில், வழங்கல் துறை முடக்கம் செய்துள்ளது. கடையில் இருந்து, கருவியை வெளியே எடுத்துச் சென்றால், அதன் செயல்பாடு முடங்கி விடும்.மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பாயின்ட் ஆப் சேல் கருவியை மையமாக வைத்து, சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, ஒவ்வொரு கடைக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வழங்கப்படும். கார்டுதாரரின் குடும்பத்தினர் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே, பொருள் வழங்கப்படும். இனி, மற்றவர்களது கார்டுகளை பயன்படுத்தி, பொருட்கள் பெற முடியாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X