பயிர் பரப்பை உயர்த்த மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் பரப்பை உயர்த்த மானியம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி பயிர் பரப்பை 16 ஆயிரம் எக்டேராக அதிகரிக்க மானியத்தில் உயிர்உரம் வழங்கல், பண்ணை குட்டை, தடுப்பணை அமைத்தல் போன்ற திட்டங்களை வேளாண்மை செயல்படுத்தி வருகிறது.கிணற்று பாசனம் மூலம் நெல்,கரும்பு, மானாவாரியாக பயறு, பருத்தி, எள், மக்காச்சோளம், நிலக்கடலை என 1.13 லட்சம் எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இதன் மூலம் எக்டேருக்கு மக்காச்சோளம் 30 குவிண்டால், பயறு 500 கிலோ, பருத்தி 4 டன் வீதம் அறுவடை கிடைக்கிறது. காலப்போக்கில் மானாவாரி பயிர் நடவில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களை விரயமாக்காமல் மானாவாரி பயிர் நடவு பரப்பை இரு மடங்காக உயர்த்த வேளாண்மை துறை செயலர் ககன்தீப்சிங்பேடி அறிவுரை வழங்கியுள்ளார். இதற்காக 4 ஆண்டுக்கு (2017 - -2020) மானிய திட்டத்தை செயல்படுத்த அரசு மாநில அளவில் 804 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.வேளாண் துறை இணை இயக்குனர் வி.தவமுனி,''மானாவாரி பயிர் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. விருதுநகரில் தற்போது 8 ஆயிரம் எக்டேரில் மானாவாரியாக பயிரிடுகின்றனர். 2020க்குள் இதன் பரப்பை 16 ஆயிரம் எக்டேராக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மானியம், பயிற்சி, செயல்முறை விளக்கம் அளிக்கிறோம், ''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X