51 பேருக்கு, 'ஜிகா'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

51 பேருக்கு, 'ஜிகா'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

51 பேருக்கு, 'ஜிகா'

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகர் என்ற பகுதியில், கல்லுாரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு, 'ஜிகா' வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தினர், ஜெய்ப்பூரில் ஆய்வு நடத்தினர். இதில், அப்பகுதியில் உள்ள கொசுக்கள், 'ஜிகா' வைரஸ் பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானில், 11 கர்ப்பிணிகள் உட்பட, 51 பேர், 'ஜிகா' வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையில் மீட்பு வாகனம்
புதுடில்லி: ஆழ்கடலில் சிக்கிக் கொள்ளும் நீர் மூழ்கிக் கப்பல்களை மீட்கும், நவீன மீட்பு வாகனங்களை, இந்திய கடற்படையினர் வாங்கி உள்ளனர். அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம், இதுபோன்ற மீட்பு வாகனங்கள் உள்ளன. அந்த வரிசையில், தற்போது, இந்தியாவும் இணைந்துள்ளது. 'இந்த வாகனங்கள், ஆழ்கடலில் சிக்கிக் கொள்ளும் நீர் மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து, காப்பாற்றும் திறன் படைத்தவை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிபதி மனைவி படுகாயம்
புதுடில்லி: ஹரியானா மாநிலம் குர்கானில், கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருப்பவர், கிருஷ்ண காந்த் சர்மா. இவரது மனைவியும், மகனும், நேற்று காலை, சந்தைக்கு சென்றனர். அவர்களுடன், பாதுகாப்புக்காக சென்ற மஹிபால் என்ற போலீஸ்காரர், நீதிபதியின் மனைவி மற்றும் மகனை, திடீரென துப்பாக்கியால் சுட்டார். இருவரும் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் உள்ளனர்; மஹிபால் கைது செய்யப்பட்டார். அவர், சில நாட்களாக மன அழுத்தத்தால், பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சிவ்பால் கட்சியில் முலாயம் மருமகள்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான, முலாயம் சிங் யாதவின் தம்பி, சிவ்பால் யாதவ், மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.முலாயம் சிங் யாதவின் இளைய மகன், பிரதீக்கின் மனைவி, அபர்ணா, இந்த புதிய கட்சியில் இணைந்துள்ளார். 'மதச்சார்பற்ற சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்' என அவர் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தலின் மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், காஷ்மீரில், 3.49 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. ஜம்முவின் சம்பா மாவட்டத்தில், 80 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வன்முறை சம்பவங்கள் இன்றி, ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X