முதல்வர் பதவி விலக வேண்டும்: கோவையில் அன்புமணி பேட்டி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவி விலக வேண்டும்: கோவையில் அன்புமணி பேட்டி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை;''முதல்வர் பழனிசாமி தாமாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
கோவையில் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். நெடுஞ்சாலை துறையில் ஏழு ஆண்டுகளாக ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை, கவர்னர்கள் ரோசையா, பன்வாரிலால் ஆகியோரிடம் நேரடியாக நான் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்; அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பதவியில் உள்ள ஒரு முதல்வரை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம். நெடுஞ்சாலை துறை மட்டுமல்ல; இன்னும் பல துறைகளில் ஊழல் குவிந்துள்ளது. ஊழலில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது என கவர்னர் கூறிவிட்டு, மறுநாள் அதை மாற்றிக்கொண்டார். விசாரிக்க வேண்டிய இடத்தில் அவர் தான் உள்ளார். ரபேல் போர் விமானம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம், 550 கோடி ரூபாய்; இந்த ஆட்சியில், 1600 கோடி ரூபாய்க்கு பேசி உள்ளனர். இப்பிரச்னைக்கு பார்லி கூட்டுக்குழு மூலம் தீர்வு காண வேண்டும். வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X