பெண்களுக்கு அனுமதி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு| Dinamalar

பெண்களுக்கு அனுமதி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சபரிமலை:'சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியை எதிர்த்து தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு மோகனரரு, கண்டரரு ராஜீவரரு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
கேரளாவில் உள்ள, சபரிமலை, அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பந்தளம் மன்னர் குடும்பமும், நாயர் சேவா சங்கமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.சபரிமலை கோவிலில் உயர் அதிகாரம் உள்ள, தாழமண் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த, கண்டரரு மோகனரரு, கண்டரரு ராஜீவரரு ஆகியோர் நேற்று தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
தீர்ப்பில் ஆசாரங்களும், நம்பிக்கைகளும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் உரிமை தந்திரிகளுக்கு உரியது. சிலை வழிபாடு, ஹிந்து மதத்தில் முக்கியமானது.அதன்படி சிலைகளுக்கு அடிப்படை உரிமை உள்ளது. சிலைகளுக்கு உரிய உரிமைகளை, நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'சீராய்வு மனு, பெண்களை இழிபடுத்தும் செயல்' என கேரளாவைச் சேர்ந்த, டி.பி.சிந்து என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நான் ஒரு அய்யப்ப பக்தை. 10 வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண், அய்யப்பனின் பிரம்மச்சரிய விரதத்தை கலைப்பார் என கூறுவது, பெண்களை மட்டுமல்ல; அய்யப்பனையும் அவமானம் செய்வதாகும்.
பெண்களை பாலியல் பொருட்களாக மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. இது சட்ட விரோதம். தெய்வத்தில் கூட, தன்னால் பாலியல் தன்மையை உருவாக்க முடியும் என்ற எண்ணம், பெண் குழந்தைகள் மனதில் இதன் மூலம் பதியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்குக்கு முக்கிய காரணமான சமூக சேவகி, திருப்தி தேசாய், வரும் மண்டல கால பூஜையின் போது சபரிமலை வர இருப்பதாகவும், ஏராளமான பெண்கள் வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.இதற்கிடையே, நேற்று, கேரள முதல்வர், பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் அமைச்சர்கள், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
'ஐப்பசி மாத பூஜைக்கு வழக்கமான வசதிகள் மட்டுமே செய்யப்படும். பெண்களுக்கான கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் நவம்பர் 15-க்குள் ஏற்படுத்த வேண்டும்' என, முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X