கண்காணிக்கலாமே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிக்கலாமே

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கண்காணிக்கலாமே

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் கழிவுகள் கலப்பதால், மிகவும் கலங்கலாக வரும் குடிநீரையே பயன்படுத்தும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள நீர் ஆதாரங்களை முறையாக பராமரிக்காமலும், பழுது பார்க்காமல் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டியதால், இன்று நீர்ஆதாரப்பகுதிகள் அனைத்தும் செயலிழந்து வருகிறது. இதனால் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தையே விருதுநகர் மாவட்ட மக்கள் நம்பி உள்ளனர். அதேநேரம் பல தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஒவ்வொரு தாலுகாவிலும் லாபகரமாக தண்ணீர் விற்பனையை செய்து வருகிறது. அரசால் சாத்தியப்படாத பாதுகாப்பான குடிநீர் சப்ளையை, தனியார்கள் சிறப்பாக செய்து வருவதால் இன்று பெரும்பாலான வீடுகளில் குடிநீர் காசுகொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால், ஊராட்சி முதல் நகராட்சி வரை உள்ளாட்சிகளால் குடிநீர் சப்ளை பாதுகாப்பாக நடக்கவில்லை. பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு அருகில் ஓடும் சாக்கடை நீருடன் கலந்து கலங்கலாக வருகிறது. இதை குடிக்கும் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். புகார் செய்தால் கூட அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. மாவட்ட நிர்வாகம்தான் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பார்ப்பதே இல்லைகலங்கல் குடிநீர் குறித்து நகராட்சியில் புகார் செய்தால், கமிஷனர் வார்டு விசிட்டே செல்வதில்லை. மேனேஜரிடம் சொன்னால், கமிஷனர் இருக்கும்போது நான் என்ன செய்யமுடியும் என்கிறார். இன்ஜினியரோ பெரும்பாலும் இருக்கையில் இருப்பதில்லை. குடிநீர் விநியோக மேற்பார்வையாளரோ சரிவர பதில் சொல்வதில்லை. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.-செல்வமணி, முன்னாள் கவுன்சிலர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X