தேயிலை ஏலத்தில் விற்பனை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை ஏலத்தில் விற்பனை அதிகரிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலத்தில் விற்பனை அதிகரித்து, மொத்த வருமானமும் கூடுதலாகி வருகிறது. கடந்த, 41வது ஏலத்தில், 'இலை ரகம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 400 கிலோ; டஸ்ட் ரகம் ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து 556 கிலோ,' என, மொத்தம், 3 லட்சத்து 30 ஆயிரத்து 956 கிலோ விற்பனைக்கு வந்தது. 99.36 சதவீதம் இலை ரகமும், 100 சதவீதம் 'டஸ்ட்' ரகமும் விற்பனையாகியது.கடந்த வாரம், கிலோவுக்கு, 80.65 ரூபாய் சராசரி விலை கிடைத்த நிலையில், இந்த வாரம், 80.19 ரூபாய் கிடைத்தது. குந்தா, இத்தலார் தொழிற்சாலைகளின் இலை ரகமும், பந்தலுார் தொழிற்சாலையின் டஸ்ட் ரகமும் அதிகபட்சம் ஏலத்திற்கு வந்தன. கடந்த வாரம் ஒரு கோடியே, 79 லட்சத்து 54 ஆயிரத்து 259 ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையான நிலையில், இந்த வாரம், 2 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 331 ரூபாய்க்கு விற்பனையானது. அதில், 39 லட்சத்து 59 ஆயிரத்து 985 ரூபாய் மொத்த வருமானத்தில் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X