திரவ உயிர் உரத்துக்கு கிராக்கி: உற்பத்தியை ஊக்குவிக்குமா அரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திரவ உயிர் உரத்துக்கு கிராக்கி: உற்பத்தியை ஊக்குவிக்குமா அரசு?

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அவிநாசி:வேளாண் துறையின் உயிர் உர உற்பத்தி மையங்களில், திரவ உயிர் உர உற்பத்திக்கு, அரசின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.வேளாண் துறை சார்பில், மாநிலத்தில், 15 இடங்களில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. நெல், சோளம், பருத்தி, தக்காளி, மிளகாய், பயறு வகை, நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர் விளைச்சலுக்கு தேவையான தழை மற்றும் மணிச்சத்து உரம், இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது
.அவை, 'அம்மா' உயிர் உரம் என்ற பெயரில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம், மானிய விலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.ஒரு கிலோ, திட உயிர் உரம் பயன்படுத்தப்படும் நிலத்தில், ஒரு லிட்டர் திரவ உரம் பயன்படுத்தினால் போதுமானது. அவற்றின் விலையும் குறைவு என்பதால், விவசாயிகள் மத்தியில், திரவ உயிர் உர உற்பத்திக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது.வேளாண் துறை சார்பில் கடலுார், சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி என, ஆறு உயிர் உர உற்பத்தி மையங்களில், ஆண்டுக்கு, 50 ஆயிரம் லிட்டர் வீதம், ஆண்டுக்கு, 6 லட்சம் லிட்டர் உயிர் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை, 100 மி.லி., 250, 500 மி.லி., என்ற அளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அதே போன்று, அவிநாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பிற மாவட்டங்களில் உள்ள, உயிர் உர உற்பத்தி மையங்களிலும், திரவ உயிர் உர உற்பத்தி மேற்கொள்ள, அரசின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.இதற்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். ரசாயன உர விலையேற்றம், அவற்றால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றால், இயற்கை மற்றும் திரவ உயிர் உர பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், உர உற்பத்தி மையங்கள் மூலம், அதன் உற்பத்தியை அதிகரிக்க, அரசு ஊக்குவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X