போக்குவரத்து நெரிசலால் மூணாறில் பயணிகள் அவதி| Dinamalar

போக்குவரத்து நெரிசலால் மூணாறில் பயணிகள் அவதி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 போக்குவரத்து நெரிசலால் மூணாறில் பயணிகள் அவதி

மூணாறு:மூணாறில், நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால், சுற்றுலாப்பயணிகள் அவதிப்பட்டனர்.
கேரளா, மூணாறில், கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறுக்கு செல்லும் வழியில், அருள்மணி பாலம் அருகே, சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.அங்கு, ‛கான்கிரீட்' பணிக்காக மெட்டல் கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது.
வார விடுமுறையான நேற்று, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகமாக சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றதுடன் ஊர்ந்து சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X