மழைக்காலத்தில் இடி, மின்னல் ஜாக்கிரதை: பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் இடி, மின்னல் ஜாக்கிரதை: பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்;இடி, மின்னல் தாக்குதலால், அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், மழை காலங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென, பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது.புயல், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால், அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. மின்னல் என்பது, ஒவ்வொரு நொடிக்கும், 50 முதல் 100 முறை தாக்குகிறது. மின்னல் அதிக திறனுடன், 100 மில்லியன் வாட்ஸ் அளவில் வெளிப்படும் போது, 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலை ஏற்படுகிறது.
மனிதர்கள், கால்நடைகள், தொலை தொடர்பு சாதனங்கள், உள் கட்டமைப்புகளை, இடி, மின்னல் சேதப்படுத்துகிறது. மற்ற பேரிடர்களை போல், இடி, மின்னல்களை முன்கூட்டி கணிக்க முடியாது.திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில், கடந்த வாரம் இடி தாக்கி, குருமூர்த்தி என்ற இளைஞர் பரிதாபமாக பலியாகியது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மழை பெய்யும் போது, வெளியே இருக்கும் நேரத்தில் இடி, மின்னல் ஏற்பட்டதால், பாதுகாப்பான கட்டடங்களுக்குள் புகுந்துவிட வேண்டும். மரங்கள் மீது இடி விழும் என்பதால், மரங்கள் அடியே ஒதுங்க கூடாது. உயரமான பொருட்களின் அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும்.திறந்த வெளியாக இருந்தால், கால்களை இறுக்க அணைத்து, கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல், குனிந்த நிலையில், தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானது. மின்சாரம் கடத்தும் பொருட்கள் அருகே நிற்கக்கூடாது. நீரில் பயணித்துக்கொண்டிருந்தால், கரையேறிவிட வேண்டும்.இடி மின்னல் ஏற்படும் போது, தொலைபேசி அல்லது 'மொபைல்' போன் பேசக்கூடாது. மின்சாதன பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. கொடி கம்பம், 'டிஸ்' ஆன்ட்டனா, உயரமான இரும்பு குழாய் உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.
டூ வீலர் நிறுத்தியுள்ள பகுதியில் நிற்காமல், தொலைவில் சென்றுவிட வேண்டும். இரும்பு கைப்பிடி பொருத்திய கட்டடம், வாகனங்கள் அருகேயும் நிற்கக்கூடாது. உயரமான கோபுரம், மரங்கள், இரும்பு டவர்கள் இருந்தால், குறைந்தபட்சம், 50 மீட்டர் தொலைவில் சென்றுவிட வேண்டும்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் மழையை காட்டிலும், இடி, மின்னலால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இடி, மின்னல் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டுமென, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.பேனர் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சமூக வலை தளங்கள், கேபிள் 'டிவி', சினிமா தியேட்டர் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X