சட்டவிரோதமாக கூடுபவர்களை கையாள்வது எப்படி? கோவையில் பயிற்சி கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோதமாக கூடுபவர்களை கையாள்வது எப்படி? கோவையில் பயிற்சி கருத்தரங்கு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:சட்டவிரோதமாக கூடுபவர்களை கையாள்வது எப்படி என்பது குறித்து கோவையில் நேற்று பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இணைந்து, 'வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பு, தமிழக போலீசாருடன் இணைந்து, 'சட்டவிரோதமாக ஒன்று கூடுபவர்களை கையாள்வது எப்படி' என்ற தலைப்பில், பீளமேடு, கோஇந்தியா ஆடிட்டோரியத்தில் நேற்று கருத்தரங்கு நடத்தியது.நீதித்துறை அணுகுமுறை குறித்து ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், நிர்வாக அணுகுமுறை குறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார், சட்டரீதியான அணுகுமுறை குறித்து ஓய்வு பெற்ற எஸ்.பி., சித்தண்ணன், மனித உரிமை குறித்து, கோவை மனித உரிமை அமைப்பு தலைவர் சாரதி கருத்து தெரிவித்தனர்.ரயில்வே கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியதாவது:போலீசார் மனித உரிமைக்கு எதிரானவர்கள் அல்ல. கலவரம் ஏற்படும் இடங்களில், போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
தேவையான பாதுகாப்பு உபகரணங்களை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப காலத்தில், போலீசார் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். கலவர இடங்களில் இருக்கும் போலீசார், எதனை அனுமதிக்க வேண்டும், அனுமதிக்க கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.'வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்' அமைப்பு தலைவர்ஓய்வு பெற்ற எஸ்.பி., அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X