தொடங்கியது பலகாரம் தயாரிப்பு சீசன் :உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடங்கியது பலகாரம் தயாரிப்பு சீசன் :உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:தீபாவளிக்கு, பேக்கரி, திருமண மண்டபங்கள், இதரப் பகுதிகளில் இனிப்பு, கார வகைகள், மொத்தமாக அதிகளவில் தயாரிக்கப்படும். அவை, தரமானதாக இருக்க வேண்டுமென, உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி வருகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய, திடீர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோல், ஆய்வின்போது தரம் குறைந்த பலகாரங்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:சுத்தமான, சுகாதாரமான இடங்களில் மட்டுமே பலகாரங்களை தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உபயோகித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது.அதேபோல், பாதுகாப்பான குடிநீரை மட்டுமே தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிமாக இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றை கட்டாயமாக பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X