தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? பயணத்திட்டத்தை இப்போதே வகுத்துக்குங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? பயணத்திட்டத்தை இப்போதே வகுத்துக்குங்க!

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் குதுாகலமாக கொண்டாட, பயண திட்டத்தை இப்போதே வகுத்தால், கடைசி நேர நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
கோவை மாவட்டத்தில் வசிப்போரில் மூன்றில் ஒரு பகுதியினர், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கோவையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் உட்பட அனைத்து ஊர்களுக்கும், 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் வசதி மிகவும் குறைவு. பஸ் கட்டணம் அதிகம் என்பதால், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல, பெருந்தொகையை ஒதுக்க வேண்டும்.நடப்பாண்டு தீபாவளி பண்டிகை, நவ., 6ல் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. சொந்த ஊரில் கொண்டாட விரும்புவோரில் பலர், சனிக்கிழமை இரவில் இருந்து, புறப்படுவர். பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, பயணத்திட்டத்தை முன்னரே வகுத்துக் கொள்வது நலம்.கோவை நகரப்பகுதியில் வசிப்பவர்கள், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கிறது என நினைக்கின்றனர். உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, பொள்ளாச்சி, பழநி வழியாகவும் மதுரை செல்லலாம். கூட்ட நெரிசலில் இருந்து தம்பிக்கலாம்.இயக்கப்படும் ரயில்கள் விவரம்l கோவை-நாகர்கோவில் ரயில், தினமும் காலை, 7:50க்கு புறப்பட்டு இரவு, 9:00 மணிக்கு நாகர்கோவில் அடைகிறது.l கோவை-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தினமும் இரவு, 7:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 5:20க்கு நாகர்கோவில் அடைகிறது.l கோவை-மதுரை பாசஞ்சர் ரயில், தினமும் மதியம், 1:45க்கு புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இரவு, 7:30க்கு செல்கிறதுl மதுரை-கோவை பாசஞ்சர் ரயில், தினமும் காலை, 7:45க்கு புறப்பட்டு திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக மதியம், 2:30க்கு கோவை வருகிறது.இவை தவிர, பாலக்காடு-திருச்செந்துார் பாசஞ்சர் ரயில் பயணம் கைகொடுக்கும். பாலக்காட்டில் இருந்து தினமும் காலை, 5:00க்கு புறப்பட்டு, காலை, 6:00க்கு பொள்ளாச்சி வரும்; 6:15க்கு புறப்பட்டு, உடுமலை பழநி, திண்டுக்கல், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், நெல்லை வழியாக மாலை, 3:30க்கு திருச்செந்துார் சென்றயும். இந்த ரயில், தினமும் காலை, 10:30க்கு திருச்செந்துாரில் புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு, 9:00க்கு வருகிறது.இதேபோல், திருவனந்தபுரம்-மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சிக்கு தினமும் காலை, 9:00க்கு வருகிறது. பழநி, திண்டுக்கல்லில் மட்டும் நிற்கும். மதியம், 12:00க்கு மதுரை சென்றடையும். எக்ஸ்பிரஸ் என்பதால், முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே ரயில், மதுரையில் மாலை, 3:45க்கு புறப்பட்டு, இரவு, 7:00க்கு பொள்ளாச்சி வந்தடையும். தென்மாவட்ட மக்கள், இவ்வசதிகளை பயன்படுத்தி, பயணத்தை திட்டமிடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X