செண்பகத்தோப்பில் யானைகள் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செண்பகத்தோப்பில் யானைகள் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் அதிகமாகி, தனியார் விவசாய நிலங்களில் தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்துவதால் பொது மக்கள் வனப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்துள்ளதால், அடிவாரப்பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான பொது மக்கள் குளிப்பதற்காக செண்பகத்தோப்பிற்குள் வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் சில அடிவார பகுதியை தாண்டி தனியார் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து தென்னை, மா, எலுமிச்சை மர கிளைகளை சேதப்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மம்சாபுரம் பகுதி விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் வேலுச்சாமியிடம் புகார் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் சம்பவ பகுதியை பார்வையிட்டனர். வனத்துறை அதிகாரிகள், 'செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வனப்பகுதியில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்து மீறி சென்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X