வாகனங்களை இயக்க அனுமதி வேண்டும்! மசினகுடி மக்கள் எஸ்.பி.,யிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களை இயக்க அனுமதி வேண்டும்! மசினகுடி மக்கள் எஸ்.பி.,யிடம் மனு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வாகனங்களை இயக்க அனுமதி வேண்டும்! மசினகுடி மக்கள் எஸ்.பி.,யிடம் மனு

ஊட்டி:'கல்லட்டி சாலையில் உள்ளூர் வாகனங்களை வழக்கம் போல் இயக்க அனுமதி வழங்க வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு செல்ல கல்லட்டி, மசினகுடி மலைப்பாதையை பயன்படுத்துகின்றனர். செங்குத்தான மலைச்சரிவில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இந்நிலையில், கடந்த, 1ம் தேதி நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள், 5 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து இரு நாட்களுக்கு பின்னரே கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து. இச்சாலையில், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, வெளியூர் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்கள் செல்ல போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.பகல் நேரங்களில் தலைகுந்தாவில் இருந்து மசினகுடி பகுதிக்கு, நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இரவு, 9:00 மணிக்கு மேல் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், முதுமலை மற்றும் மைசூரு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தற்போது முதுமலை, தெப்பக்காடு, கூடலூர் வழியாக ஊட்டி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மசினகுடி மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், எஸ்.பி., சண்முகப்பிரியாவிடம் கொடுத்துள்ள மனுவில்,'தற்போது, உள்ளூர் வாகனங்கள், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் மசினகுடி பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் இவ்வழித்தடத்தில் வழக்கம் போல் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்போம்,' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X