'தாயகம் திரும்பியோருக்கு ஆயிரம் வீடுகள் உறுதி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தாயகம் திரும்பியோருக்கு ஆயிரம் வீடுகள் உறுதி'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி:'நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மக்களுக்கு, 1000 வீடுகள் கட்டித்தரப்படும்,' என, மறுவாழ்வு துறை இணை ஆணையர் தெரிவித்தார்.கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியநகரில் நடந்த நிகழ்ச்சியில், அரசின் மறுவாழ்வு துறை இணை ஆணையர் பாஸ்கரன் பங்கேற்று பேசியதாவது:பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் அரசு மூலம் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, சட்டசபையில் தெரிவித்தப்படி, நீலகிரி மாவட்டத்தில், தாயகம் திரும்பிய மக்களுக்கு, 1000 வீடுகள் கட்டித்தரப்படும். தகுதியுள்ள பயனாளிகள் தாயகம் திரும்பியோர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.பயனாளிகள், குறைந்தப்பட்சம் ஒரு சென்ட் நிலப்பட்டா வைத்திருப்பதுடன், தாயகம் திரும்பியோர் என்பதற்காக, ஏதாவது ஆவணம் வைத்திருக்கவேண்டும். தவிர, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். வீடுகள் கட்டும் பயனாளிகள் யாருக்கும் நிதி வழங்க தேவையில்லை.தகுதியுள்ள பயனாளிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்றெவேண்டும். இவ்வாறு பாஸ்கரன் பேசினார். இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X