மாத மங்களத்தில் யானை முகாம்: கண்காணிப்பில் வனத்துறையினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாத மங்களத்தில் யானை முகாம்: கண்காணிப்பில் வனத்துறையினர்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்;பந்தலுார் அருகே, எருமாடு மாதமங்களம் பகுதியில், முதன்முறையாக யானை முகாமிட்டதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலுார் எருமாடு சுற்றுவட்டார பகுதிகளான மண்ணாத்திவயல், மாதமங்களம், கோட்டூர், மணல்வயல், மானுார், கல்லிச்சால் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை காட்டுயானைகள் சென்றதில்லை. இதனால், இப்பகுதியை சேர்ந்த மக்கள் நேந்திரன் வாழை, நெல், பாக்கு விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மாதமங்களம் பகுதிக்கு ஒற்றையானை வந்துள்ளது. திடீரென தங்கள் கிராமத்தில் யானையை பார்த்த மக்கள் அச்சத்துடன் ஓடி தப்பினர். தகவலறிந்த வனச்சரகர்கள் கணேசன், மனோகரன், வனக்காப்பாளர்கள் ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட, 30 பேர் கொண்ட வனக்குழுவினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு, யானை கிராமத்திற்குள் மீண்டும் நுழையாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளை ஒட்டிய புதரில் படுத்து ஓய்வெடுத்த யானையை பார்க்க அப்பகுதி மக்கள் அதிகளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'யானை முகாமிட்டுள்ள பகுதியை சுற்றிலும் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளதால், பகல் நேரத்தில் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல் யானை செல்லும் வழியாக பொதுமக்கள் செல்லாமல் தடுத்து, யானை விரட்டப்படும். இரவில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X